நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை | தினகரன்


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை-Rain in the Evening-Meteorology

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியாமாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் (குறிப்பாகமேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களிலும்)75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...