அரசு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் கவலையளிக்கிறது

அரசு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் கவலையளிக்கிறது-SM Chandrasena Regret Oppostionts Reaction Over Govt Activities

அமைச்சர் எஸ். எம் .சந்திரசேன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டில் தற்போது ஆட்சியில் இல்லாவிட்டால் நாடு மிக மோசமான விளைவுகளை சந்தித்திருக்கும் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

30 வருட கால பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட அதே பலத்துடன் நாட்டை தோளில் ஏந்தி தற்போதைய சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய தருணத்தில் எதிர்கட்சியானது எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு மிக இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இக்காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக அவ்வாறு எதிர்க்கட்சி செயற்படுவது கவலை தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பில் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்ற எதிர்க்கட்சி, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் பிரதமரினால் ஒரு உதாரணத்திற்காக பொதுத்தேர்தல் தொடர்பில்சொல்லப்பட்ட கருத்தை வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இது மிகவும் வருந்தத்தக்க ஒரு செயல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி யுள்ள இந்த தருணத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியவர்களே இவ்வாறு எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்வது முறையற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...