Friday, April 10, 2020 - 9:41am
மன்னார் சிலாவத்துறை, அலகட்டு பகுதியில் மின்னல் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று (09) வீட்டிலிருந்த வேளையில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அலகட்டு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment