நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர்கள் சொந்த ஊர் திரும்ப மாற்று வழிமுறை

ஆளுங்கட்சிக் கூட்டத்தில் இ.தொ.கா. வலியுறுத்து 

கொழும்பு மாவட்டம் கொரோனா வைரஸ் பரவும் அபாயரமான வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர்களை சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு சொந்த ஊர்களுக்கு அனுப்ப முடியாதென சுகாதார அதிகாரிகள் கைவிரித்துள்ள நிலையில் அவர்களை தமது ஊர்களுக்கு திரும்பும்வரை மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கொரோனா ஒழிப்பு தேசிய செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் ஆளுங்கட்சிக் கூட்டம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொழும்பில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர்கள் தமது சொந்த ஊர்களுக்கு திரும்பும்வரை மாற்று வழிமுறைகள் குறித்து ஆராயும் யோசனையை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்ததன் பின்புலத்திலேயே ஆளுங்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட செந்தில் தொண்டமான் இந்த விடயத்தை வலிறுத்தியுள்ளார்.

மாற்று வழிமுறைகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பிரகாரம் உடனடியாக பரிசீலிப்பதாக அரசாங்கத்தின் சார்பில் உறுதியளிப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


Add new comment

Or log in with...