சுமார் 15 இலட்சம் பேருக்கு தொற்று; ஸ்பெயினில் 15,000 பேர் பலி | தினகரன்


சுமார் 15 இலட்சம் பேருக்கு தொற்று; ஸ்பெயினில் 15,000 பேர் பலி

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை15,238ஆக அதிகரித்துள்ளது.  ஆனால் புதிதாக இத்தொற்று நோய்க்கு உள்ளாகுபவர்களின் வீதம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய (09) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,756 தொற்று நோயாளர்கள் இனங் காணப்பட்டிருந்தனர். நேற்று (08) 6,180 தொற்று நோயாளர்கள் இனங் காணப்பட்டிருந்தனர். ஸ்பெயினில் நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய நிலவரம் சற்றுக் குறைவடைந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 15 இலட்சத்து 26 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 96 ஆயிரத்து 66 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...