மன்னார் - மதவாச்சி வீதியில் விபத்து; இரு பெண்கள் பலி | தினகரன்


மன்னார் - மதவாச்சி வீதியில் விபத்து; இரு பெண்கள் பலி

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று (09) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னாரிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும், முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்த  பிக்கப் வாகனமும் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு பெண்களும் சகோதாரிகளாவர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா (40) மற்றும் மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் சந்தியோகு டெரன்சி (25)  ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் கடமை முடிந்த நிலையில் மன்னாரிலிருந்து கட்டை அடம்பன் பகுதியிலுள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரினதும்  சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த பிக்கப் வாகனத்தின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

(மன்னார் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...