மினி சூறாவளியால் 10 வீடுகள் சேதம் | தினகரன்

மினி சூறாவளியால் 10 வீடுகள் சேதம்

வவுனியாவில் வீசிய மினி சூறாவளியால் பத்து வீடுகளும் பாடசாலை கட்டடமொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வவுனியாவில் வெப்பமான காலநிலை நிலவி வந்திருந்த நிலையில் கடந்த இரு நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

வவுனியா, சுந்தரபுரம் மற்றும் மணிபுரம் பகுதியில் வீசிய மினி சூறாவளியால் பத்து வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன், சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலத்தின் பிரதான கட்டடங்களின் கூரைத்தகடுகளும் தூக்கி வீசப்பட்டடுள்ளன. அத்தோடு, இச்சூறாவளியால் பப்பாசி தோட்டங்கள் அழிந்தமையால் தோட்ட செய்கையாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவளை வவுனியா வைரவ புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் காணப்பட்ட பழமை வாய்ந்த மரமொன்றும் முறிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியுடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

(கனகராயன்குளம் நிருபர்)


Add new comment

Or log in with...