இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைப்பு: குடியரசுத் தலைவர் அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அனுமதி அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கருத்திற்கொண்டு, 2020 - 2021 மற்றும் 2021 – 2022 ஆகிய ஆண்டுகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அமைச்சரவை திங்கட்கிழமையன்று அனுமதி அளித்தது.

அத்துடன் பிரதமர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை ஒரு வருடத்திற்கு 30 சதவீதம் குறைக்கும் சட்டத்திற்கும் அமைச்சரவை அனுமதி அளித்தது. இந்தத் தொகை கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...