அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,970 பேர் பலி | தினகரன்


அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,970 பேர் பலி

- தொற்றுக்கு உள்ளானோர் 4 இலட்சத்தை எட்டியது
- உலக அளவில் 82,000 பேர் மரணம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஒரே நாளில் 1,970 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,907 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு அமெரிக்காவில் 399,886 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலகம் முழுவதும் 14 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 14 இலட்சத்து 31 ஆயிரத்து 691 பேருக்கு (1,431,691) வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று உலக அளவில், ஒரே நாளில் சுமார் 7,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 78 (82,078) ஆக உயர்ந்துள்ளது. 3 இலட்சத்து 2150 பேர் குணமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனைகளில் 10 இலட்சத்து 47 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...