7ஆவது மரணம் பதிவு; மேலும் ஒருவருக்கு தொற்று-189; இருவர் குணமடைவு-44 | தினகரன்


7ஆவது மரணம் பதிவு; மேலும் ஒருவருக்கு தொற்று-189; இருவர் குணமடைவு-44

7ஆவது மரணம் பதிவு; மேலும் ஒருவருக்கு தொற்று-189; இருவர் குணமடைவு-44-7th COVID19 Death Reported-One More Reported-2 More Recovered

- 138 பேர் சிகிச்சையில்; 228 பேர் கண்காணிப்பில்
- அக்கரைப்பற்றில் ஒருவர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 7ஆவது நபர் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர், 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த, மாணிக்க வியாபாரி எனவும், அவர் அண்மையில் ஜேர்மனியிலிருந்து வந்தவர் எனவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நபர் அடையாளம்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து இவ்வெண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது. கட்டாரிலிருந்து மார்ச் 16 ஆம் திகதி வந்தவர்களில் கல்முனை பிராந்தியத்திற்கு வந்த 07 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எஞ்சிய 06 பேரினதும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன் போது அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த 07 பேரும் மார்ச் 16ஆம் திகதியே 14 நாட்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் கடந்த பின்னரே அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய, நேற்றுமுன்தினம் (06) ஏனைய 06 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, அக்கரைப்பற்றைச் சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இன்று (08) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வைத்தியர் சுகுணன் தெரிவித்தார்.

குறித்த நபருக்கு எவ்விதமான அறிகுறிகளும் காணப்படவில்லை என்பதோடு, 19 நாட்கள் கழிந்த நிலையிலேயே அவர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த 05 நாட்களில் தொடர்புற்றவர்கள் உள்ளிட்ட குறித்த நபரை அழைத்து வந்த வாகனத்தின் சாரதி உள்ளிட்ட 09 பேரை அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த 09 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 21 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். 

இன்றையதினம் (08) மாலை 6.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 188 இலிருந்து 189 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிய மேலும் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய, இன்றையதினம் (08) கொரோனா தொற்றிய 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 189 பேரில் தற்போது 138 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 44 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 228 பேர் கொரோனா தொற்று தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 189
குணமடைவு - 44

சிகிச்சையில் - 138
மரணம் - 07

மரணமடைந்தவர்கள் - 07
இலங்கையில் - 07

ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 06
பிரிட்டனில் - 02 பேர் (06)
மெல்பர்னில் - ஒருவர் (04) (அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை)
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 44
ஏப்ரல் 07 - 02 பேர் (44)
ஏப்ரல் 07 - 04 பேர் (42)
ஏப்ரல் 06 - 05 பேர் (38)
ஏப்ரல் 05 - 06 பேர் (33)
ஏப்ரல் 04 - 03 பேர் (27)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 189
ஏப்ரல் 08 - 04 பேர் (189)
ஏப்ரல் 07 - 07 பேர் (185)
ஏப்ரல் 06 - 02 பேர் (178)
ஏப்ரல் 05 - 10 பேர் (176)
ஏப்ரல் 04 - 07 பேர் (166)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 06 பேர் (78)
மார்ச் 20 - 06 பேர் (72)
மார்ச் 19 - 12 பேர் (66)
மார்ச் 18 - 11 பேர் (54)
மார்ச் 17 - 14 பேர் (43)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 02 பேர் (06)
மார்ச் 12 - 02 பேர் (04)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்


Add new comment

Or log in with...