அம்பாறை மாவட்டத்தில் 68 ஆயிரம் ஹெக்டெயரில் நெற்பயிர்ச் செய்கை

விவசாயிகளுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்துள்ளதாக பணிப்பாளர் அபுல் கலீஸ் தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் விவசாயிகள் பாதிப்பில்லாத வகையில் தமது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ். அபுல் கலீஸ் தெரிவித்தார்.

மாவட்டத்தில் 68 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற் பயிர்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது 70 வீதமான நிலப்பரப்பில் விதைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தேவையான பசளைகள் கமநல சேவை நிலையங்கள் ஊடாக தடைகளின்றி வழங்கப்பட்டு வருகின்றன. பசளைகளை விநியோகிப்பதில் எவ்வித தட்டுப்பாடுகளும் நிலவவில்லை.இதேவேளை விவசாயிகளுக்கு தேவையான சில இரசாயண நாசினிகளை விநியோகிப்பதற்கு வியாபார நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வயல் நிலங்களுக்கு விவசாயிகளை தேடிச்சென்று இவற்றை வழங்குவதற்கான பாஸ் அனுமதியும் வியாபார நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது விவசாய நிலங்களுக்கான நீர் விநியோகமும் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்) 


Add new comment

Or log in with...