திருப்பழுகாமம் விவசாயிகளுக்கு இலவச உரமானியம் | தினகரன்


திருப்பழுகாமம் விவசாயிகளுக்கு இலவச உரமானியம்

திருப்பழுகாமம் கமநல சேவைகள் திணைக்களத்தினால் விவசாயிகளுக்கான இலவச உரமானியம் வழங்கி வைக்கப்பட்டது.

பழுகாமம் கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதேச உத்தியோகத்தர் க.கலியுகராஜ் தலைமையில் 2020 சிறுபோகச்செய்கையாளர்களுக்கான உரமானியமே நேற்று வழங்கப்பட்டது. பழுகாமம் பிரதேசத்திலுள்ள 3576 ஏக்கர் வயற்கண்டங்களில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள 1500 விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்று இவ் உரமானியங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...