இலவச பாதுகாப்புக் கவசங்களை இத்தாலிக்கு விற்று விட்டதா சீனா? | தினகரன்


இலவச பாதுகாப்புக் கவசங்களை இத்தாலிக்கு விற்று விட்டதா சீனா?

ட்ரம்பின் அதிகாரி கூறுகின்ற தகவல்!

கொரோனா வைரஸால் சீனா முதன்முதலில் பாதிக்கப்பட்டது. அப்போது சீனா மீது உலக நாடுகள் அனுதாபப்பட்டன. பல நாடுகள் சீனாவூக்கு உதவி செய்தன. இத்தாலி மருத்துவ பாதுகாப்பு கவசங்களை தொன கணக்கில் இலவசமாகக் கொடுத்து உதவியது.

இத்தாலியிடம் இலவசமாகப் பெற்ற அதே பாதுகாப்புக் கவசங்களை இப்போது பணம் பெற்றுக் கொண்டு அதே இத்தாலிக்கு சீனா அனுப்பி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இரகசியம் இப்போது அம்பலமாகி உள்ளது. 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால்இ அந்தத் தகவலை நீண்ட நாட்கள் மூடி மறைத்தது சீனா. அதற்குள் அந்த வைரஸ் சீனாவின் வூஹான் மாகாணத்தில் வெகுவாகப் பரவியது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.

இந்தத் தகவல் வெளியான சில நாட்களில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பல மடங்கு அதிகரித்தது. 80இ000 பேருக்கும் மேல் வெகு சில நாட்களில் பாதிக்கப்பட்டனர். அப்போது சீனா மீது அனுதாபப்பட்டு பல நாடுகளும் உதவி செய்தன.

சுகாதாரத்தில் முன்னணியில் இருக்கும் இத்தாலி தொன் கணக்கில் மருத்துவ பாதுகாப்புக் கவசங்களை இலவசமாக அனுப்பி வைத்தது. அப்போது இத்தாலி தனது நாட்டில் மக்கள் ஆயிரம்இ ஆயிரமாக பலியாவார்கள் என எண்ணி இருக்கவில்லை. பின்னர்இ சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது.

அப்போதுஇ பல ஆயிரம் பேர் இறந்த நிலையில்இ மருத்துவ வசதிகள் போதாமல்இ மருத்துவ பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தடுமாறி வந்த இத்தாலிக்கு சீனா மருத்துவ பாதுகாப்புக் கவசங்களை அளிப்பதாகக் கூறியது. அவற்றை அனுப்பியூம் வைத்தது.

உலகமே சீனா சரியான சமயத்தில் பெரிய உதவி செய்து விட்டதாக நினைத்த நிலையில்இ அந்த நாடு குறைந்த அளவூ பாதுகாப்புக் கவசங்களை மட்டுமே இத்தாலிக்கு அனுப்பி இருப்பதும்இ அதுவூம் பணம் கொடுத்து அதை வாங்கிக் கொண்டதும் தெரியவந்துள்ளன.

இத்தாலி இலவசமாகக் கொடுத்ததைஇ அதே இத்தாலியிடம் பணத்திற்கு விற்றுள்ளது சீனா. இது குறித்த தகவல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் இருக்கும் ஒரு அதிகாரி ‘ஸ்பெட்டேட்டர்’ என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்போது சீனாவின் பல இடங்களில் இயல்பு நிலை இருப்பதாக சீன அரசு கூறுகிறது. ஆனால்இ உலகின் எந்த நாட்டிலும் இயல்பு நிலை இல்லை. கொரோனா வைரஸை எதிர்கொள்ள முடியாமல் உலகமே தடுமாறுகிறது.(ழுNநுஐNனுஐயூவூயூஆஐடு)

 


Add new comment

Or log in with...