உண்மையை விட தவறான செய்திகளே சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிர்வூ!

கொரோனாவூக்கு அமெரிக்க ‘றௌச்’ நிறுவனம் மருந்து கண்டுபிடித்து விட்டதாக  தீயாகப் பரவிய தகவல்!

சமூக ஊடகங்களில் பெரும்பாலும் உண்மைச் செய்திகளை விடத் தவறான அல்லது பொய்யான தகவல்கள்தான் வெகு வேகமாகப் பரவூகின்றன. அப்படியான தகவல்களில் ஒன்றுதான் அமெரிக்காவில் கொரோனாவூக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதாகும்.

அமெரிக்காவின் ‘ரோச்’ மருத்துவ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சாதனைஇ கொரோனாவூக்கு தடுப்பூசி தயார்இ ஊசி போட்ட மூன்று மணி நேரத்தில் கொரோனாவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது தடுப்பு மருந்துஇ ஞாயிறு (அது எந்த ஞாயிறு என்று தகவல் பகிர்பவருக்கும் தெரியாது) முதல் உலகெங்கும் விற்பனை செய்யப்பட இருப்பதாக ரோச் நிறுவனம் அறிவித்து உள்ளது.

இதுதான் அண்மையில் பரப்பப்பட்ட அந்தத் தகவல். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி மக்களை உயிர்ப் பயத்தில் வைத்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில்இ எந்த மருந்தைத் தின்றால்இ எதைச் செலுத்தினால் தப்பிக்கலாம் என்று தவித்துக் கொண்டிருக்கும் நிலையில்இ உலகின் மிகப் பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான ‘ரோச்’ நிறுவனம் கொரோனாவூக்கு மருந்து கண்டுபிடித் திருப்பதான தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனுடன் ஒரு வீடியோ பதிவூம் வலம் வந்தது.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒருபோதும் ‘ரோச்’ நிறுவனத்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை மருந்து வெளியிடப்படும் என்று சொல்லவில்லை. என்.பி.சி. செய்தியின் இந்த ஒளிநறுக்கில் கொரோனா வைரஸ் சோதனைகளுக்கு அனுமதியளித்ததற்காக உணவூ மற்றும் மருந்துகள் அமைப்புக்கு (எப்.டி.ஏ) ரோச் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான மேட் சாஸ் நன்றிதான் தெரிவிக்கிறார்.

இந்த நிறுவனத்துக்கு கொரோனா வைரஸ் சோதனைகளுக்குத்தான் அவசரகால அனுமதியளிக்கப்பட்டுள்ளதே தவிரஇ மருந்துக்காக அல்ல.

இதை முதன்முதலில் வெளியிட்டவர்கள் அகற்றி விட்டிருக்கின்றனர். ஆனால்இ விபரம் அறியாமல் அதைக் கடமையாகப் பலர் இன்றும் கூட பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

சுற்றுக்கு விடாமல் உடனடியாக அகற்றப்பட வேண்டிய தகவல் இது. இதுஒருபுறமிருக்க மாற்று சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளை ஊக்குவிக்கும் இந்திய ஆயூஷ் அமைச்சகம்இ கொரோனா வைரஸஷுக்கு ஹோமியோபதி முறையில் சிகிச்சை இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை என்று தௌpவூபடுத்தியூள்ளது.

ஆனால் இதுபோன்ற ஆதாரபூர்வமான விளக்கங்களையூம் மீறிஇ கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மாற்று மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி இந்தியாவில் இதுபோன்ற செய்திகள் இணையதளங்களின் வழியாக அதிகளவில் தொடர்ந்து பரவி வருகின்றன.

இந்திய அரசின் ஆயூஷ் அமைச்சகம் (ஆயூர்வேதம்இ யோகா மற்றும் இயற்கை மருத்துவம்இ யூனானிஇ சித்தா மற்றும் ஹோமியோபதி) இ பாரம்பரிய மற்றும் மாற்று மருந்துகளை ஊக்குவிக்கிறது.

கொரோனா வைரஸின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளன என்று ஆயூஷ் அமைச்சகம் இந்த ஆண்டு ஜனவரி 29 அன்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. கொரோனா வைரஸ் கொவிட் 19-ஐ குணப்படுத்த மாற்று மருந்துகள் இருப்பதாக பலர் இந்தச் செய்தியை வட்ஸ் அப்பில் பகிர்ந்து ஆலோசனை கூறுகின்றனர்.

இந்தியாவில் உண்மைச் செய்திகளை சரிபார்க்கும் ‘பூம்’ என்ற வலைத்தளம் இந்த செய்திகள் வைரலாவதைப் பார்த்த பிறகுஇ "ஹோமியோபதி மாத்திரைகள் கொவிட்19 பரவூவதைத் தடுக்க உதவூம் என்ற கோட்பாட்டை ஆதரிக்கும் எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியூம் இதுவரை நடைபெறவில்லை" என்று கூறியது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த செய்திகளை ‘தி லொஜிக்கல்’ இந்தியன் வலைத்தளமும் ஆராய்ந்தது. சமூக ஊடகங்களை பரவலாக பயன்படுத்துபவர்கள் அமைச்சகத்தின் செய்தியை தவறாகப் புரிந்து கொண்டதை அது கண்டறிந்தது.

" கொரோனா வைரஸை குணப்படுத்தும் சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அல்லது இதன் பாதிப்பில் இருந்து தடுப்பதற்காக இதுவரை எந்த தடுப்பூசியூம் உருவாக்கப்படவில்லை. இத்தகைய சு+ழ்நிலையில்இ மக்கள் நிவாரணத்திற்காக மாற்று மருந்துகளைத் தெரிவூ செய்கிறார்கள். ஆனால் கொரோனா வைரஸை மாற்று மருந்துகள் குணப்படுத்தும் என்று சொல்லி விட முடியாது.

ஆனால் கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து தவறான செய்திகள் இந்தியாவில் இருந்து மட்டும் சமூக ஊடகங்களில் பரப்பப்படவிலை. இங்கிலாந்துஇ அமெரிக்காஇ கானா மற்றும் பல நாடுகளிலும் பகிரப்படுகின்றன. நிதிச் சந்தையை சரிய வைத்து பயணத் தடைகள்இ அச்சுறுத்தல் போன்றவற்றைத் தூண்டிஇ உலகத்தை ஆட்டிப் படைக்கும் புதிய கொரோனா வைரஸ் குறித்து வெளிவரும் தவறான தகவல்களை தடுக்க பல அமெரிக்க சமூக ஊடக நிறுவனங்கள் கடுமையாக போராடுகின்றன.

தற்போதுஇ சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வைரஸைப் பற்றிய பல தவறான தகவல்களை ஆவணப்படுத்தியூள்ளனர் அதில் நோயின் தோற்றத்திற்கு இனவெறியை காரணம் காட்டும் விளக்கங்கள் முதல் நோயைக் குணப்படுத்தும் சில விநோத மருத்துவ முறைகள் வரை அடங்கும். சில சதிகார எண்ணமுள்ளவர்கள் மற்றும் இழிவான சிந்தனையூள்ளவர்கள் இந்த பதற்றமான சு+ழல்இ மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பீதியை பயன்படுத்தி தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

தவறான மற்றும் பொய்யான தகவல்கள் அதிகரிக்க இது ஒரு முக்கிய காரணம். சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்னர் வதந்திகள் பரவிய வேகத்தை விட சமூக ஊடகங்கள் வந்த பின்னர் அவை பரவூம் வேகம் மிக அதிகம் என்கிறார் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் தோமஸ் ரிட் என்பவர்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகள்இ நோயைத் தடுக்கும் அல்லது குணப்படுத்தும் மருந்துகள் உருவாகி விட்டதாகவூம்இ அவை விரைவில் வணிக ரீதியாக வரும் என்று பரப்பப்படும் வதந்திகள் குறித்து சமூக ஊடக தகவல்களை மதிப்பாய்வூ செய்து உண்மை தன்மையை ஆய்வூ செய்பவர்கள்இ மருத்துவ வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் அதிருப்தியையூம் கவலையையூம் தெரிவித்துள்ளனர்.

பயோடெக்னோலொஜி நிறுவனங்கள் தடுப்பூசிகளை ஆராய்ச்சி செய்து உருவாக்கத் தொடங்கி இருந்த போதிலும்இ அவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு நீண்ட காலமாகும்.

பல தவறான தகவல்கள் பொதுவாக ஆசிய நாட்டவர்களுக்கு குறிப்பாக சீனர்களுக்கு எதிராக முற்றிலும் இனவெறி கொண்டவையாக இருக்கின்றன. கொரோனா வைரஸ் முதல் சீன சமையல் நடைமுறைகள் வரை விமர்சிக்கும் இடுகைகள் வைரலாகின்றன. இந்தத் தவறான இனவெறி விமர்சனங்களால் டொரொண்டோவில் செயல்படும் ஒரு புதிய சீன உணவகம் ஆய்வூக்கு உட்படுத்தப்பட்டது.

“தற்போது நிறைய தவறான தகவல்கள் பரவூகின்றன. அவற்றில் சில மிகவூம் ஆபத்தானவை" என்று எச்சரிக்கிறார் உலக சுகாதார அமைப்பின் வளரும் நோய்கள் பிரிவின் தலைவர் மரியா வோன் கெர்கோவ்.

வைரஸ்கள் எப்போதுமே பயத்தையூம் தவறான தகவல்களையூம் தூண்டி விடுகின்றன. வதந்திகள் பரவூவதால் பீதி கிளம்புகிறது. மேலும் மக்கள் உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வதந்திகளால் பதற்றமடைகிறார்கள். தேர்தல்கள்இ துப்பாக்கிச் சு+டுஇ விமான விபத்துக்கள் மற்றும் இயற்கை பேரழிவூகள் குறித்து பரப்படும் தவறான தகவல்களை போல இதுவூம் மிகைப்படுத்தப்படுகிறது.

‘ ட்விட்டர்’ நிறுவனம் கொரோனா வைரஸ் தொடர்பாக நம்பகமான ஆதாரங்களை பயனாளிகளுக்கு அனுப்புவதன் மூலம் பொய்யான தகவல்களை தடுக்க முயற்சிக்கிறதுஇ

கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை தேடும் பயனாளிகளை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களை பார்வையிட பரிந்துரைக்கிறது. ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் அல்லது தவறாக வழிநடத்த முயற்சிக்கும் நபர்களுக்கு எதிரான கொள்கையை ட்விட்டர் பின்பற்றுகிறது.

வைரஸ் பிரச்னையில் சீன விஞ்ஞானியின் தொடர்பு இருப்பதாக ஒரு கட்டுரை வெளியிட்ட ஜீரோ ஹெட்ஜ் என்ற வலைத்தளத்தை நிரந்தரமாக முடக்கியூள்ளது ட்விட்டர் நிறுவனம்.

பேஸ்புக் நிறுவனத்தின் உண்மை சரிபார்க்கும் குழுக்கள் கொரோனா வைரஸைப் பற்றிய தவறான தகவல்களை தங்களது வலைத்தளத்தில் கோடிட்டுஇ முத்திரை குத்தி சுட்டிக்காட்டுகின்றன. அப்போது பயனாளிகள் இது தவறானது என்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியூம். மேலும் உண்மை நிலையை சரிபார்ப்பதற்கு முன்பே தவறான தகவல்களை பகிரும் நபர்களை பேஸ்புக் கடுமையாக எச்சரிக்கிறது.

அல்ஃபபெட் நிறுவனம் கொரோனா வைரஸிற்கான தகவல்களை கூகிளில் தேடும் போதுஇ நோய் கட்டுப்பாட்டு மையங்களுடன் இணைக்கும் பேனல்கள் முதலிடத்தில் வருமாறு பார்த்துக் கொள்கின்றது. தேடல் முடிவூகளின் வரும் செய்திகள்இ உலக சுகாதார அமைப்பின் மூலம் வரும் தகவல்களாக இருக்குமாறு மாறுதல்கள் செய்துள்ளன.

 


Add new comment

Or log in with...