அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி செல்வம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் | தினகரன்


அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி செல்வம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

கொரோன வைரஸ் தாக்கம் காரணமாக சிறைக் கைதிகளை விடுதலை செய்தது போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுதலை செய்ய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது 'செல்' துவல்களை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் எவ்வித மருத்துவ வசதிகளுமின்றி சிறைச்சாலைகளில் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களின் நலனை கருத்திற்கொண்டு ஏனைய கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது போல் அவர்களையும் விடுதலை செய்ய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக சிறைச்சாலையிலுள்ள கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த அரசியல் கைதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அரசு விடுதலை செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மன்னார் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...