சமூக வலைத்தளத்தில் போலி செய்தியை பரப்பிய பெண் கைது | தினகரன்


சமூக வலைத்தளத்தில் போலி செய்தியை பரப்பிய பெண் கைது

சமூக வலைத்தளத்தில் போலி செய்தியை பரப்பிய பெண் கைது-Fake News Via Social Media-Women From Wadduwa Arrested

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரம் பரப்பியமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, நேற்றையதினம் (05) வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் நேற்றையதினமே (05) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இணையத்தைப் பயன்படுத்தி வதந்திகள், பொய்ப் பிரசாரங்களை ஏனையோருக்கு பகிரும் (Share)  நபர்களும் கைது செய்யப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...