மரணித்த 5ஆவது நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது | தினகரன்


மரணித்த 5ஆவது நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்த ஐந்தாவது நபரின் இறுதிக்கிரியை இன்று (04) பிற்பகல் இடம்பெற்றது.

திம்புலாகல, விஜயபாபுர மயானத்தில் குறித்த நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இவர், இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் முகாமில் வைத்து அடையாளம் காணப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 23 ஆம் திகதி வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான குறித்த நபர் மார்ச் 26 ஆம் திகதி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில் , இன்று (04) காலை மரணமடைந்தார்.

 


Add new comment

Or log in with...