மேலும் 03 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 162 | தினகரன்


மேலும் 03 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 162

மேலும் 03 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 162-3 More COVID19 Patients Identified-Total Count Up to 162

நேற்றும் இன்றும் அடையாளம் காணப்பட்ட 11 பேரின் விபரம் வெளியீடு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, இன்று (04) பிற்பகல் 4.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 159 இலிருந்து 162 ஆக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம் (03) 08 பேர் அடையாளம் காணப்பட்டதோடு, தற்போது மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 11 பேரினதும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் 03 பேர் யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 02 பேர் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொருவர், புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அடையாளம் காணப்பட்டதோடு, மேலும் ஒருவர் சிலாபம் பிரதேசத்தில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களுடன் நெருக்கமாக செயற்பட்ட மேலும் ஒருவர் இதில் அடங்குவதோடு, களுத்துறை பிரதேசத்தில், மூடப்பட்ட பகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவரும் இதில் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அக்குரணை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புடைய இருவர் ஆகிய 11 பேர் நேற்றும் இன்றும் அடையாளம் காணப்பட்ட நபர்கள் என, அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 162 பேரில் தற்போது 132 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 25 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய தினம் மரணித்தவருடன் இது வரை 05 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

அந்த வகையில் குணமடையும் வீதம் 15.7% வீதமாக அமைந்துள்ளதுடன், மரண வீதம் 0.3 வீதமாக அமைந்துள்ளது.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 273 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 162
குணமடைவு - 25

சிகிச்சையில் - 132
மரணம் - 05

மரணமடைந்தவர்கள் (08)
இலங்கையில் - 05
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 03
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 25
ஏப்ரல் 04 - ஒருவர் (25)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 162
ஏப்ரல் 04 - 03 பேர் (162)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்


Add new comment

Or log in with...