உள்நாட்டு இறைவரி தரம்‌ III பதவி; விண்ணப்ப திகதி பிற்போடப்பட்டது | தினகரன்


உள்நாட்டு இறைவரி தரம்‌ III பதவி; விண்ணப்ப திகதி பிற்போடப்பட்டது

உள்நாட்டு இறைவரி தரம்‌ III பதவி; விண்ணப்ப திகதி பிற்போடப்பட்டது-Inland Revenue Grade iii Post Vacancy Postponed

உள்நாட்டு இறைவரி சேவை தரம்‌ III பதவிக்கான விண்ணப்பம் கோருவதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள உள்நாட்டு இறைவரி ஆணையாளர்‌ நாயகம்‌ இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கடந்த மார்ச்‌ 06 ஆம்‌ திகதி வெளியிடப்பட்ட 2166 ஆம்‌ இலக்க வர்த்தமானி  அறிவித்தல்‌ ஊடாக உள்நாட்டு இறைவரி சேவை தரம்‌ III பதவிக்கு ஆட்சேர்ப்புச்‌ செய்வதற்கான விண்ணப்ப முடிவுத்‌ திகதி 2020 ஏப்ரல்‌ 06 ஆம்‌ திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும்‌ , நாட்டின் நிலைமை கருதி மேற்கூறப்பட்ட விண்ணப்பம்‌ கோருதல்‌ காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. பின்னர்‌ விண்ணப்பங்களை மீளக்கோருவதற்கான திகதியை அறிவிப்பதற்கு  உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...