பிணை வழக்குகளை இரத்து செய்ய முடியுமா? | தினகரன்


பிணை வழக்குகளை இரத்து செய்ய முடியுமா?

ஆராயுமாறு சட்ட மாஅதிபரால் பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள்

ஊரடங்கு அமுலில் உள்ள எதிர்வரும் இரு நாட்களில், மேல் நீதிமன்றத்தில் பிணை தொடர்பான வழக்குகளை இரத்துச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம், சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். சட்ட மாஅதிபரின் இணைப்பாளர், சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...