மேலும் மூவர் யாழ், மருதானை, குருணாகலில் அடையாளம்; எண்ணிக்கை 146

மேலும் மூவர் யாழ், மருதானை, குருணாகலில் அடையாளம்; எண்ணிக்கை 146-3 More COVID19 Patients Identified

126 பேரே சிகிச்சையில்; 18 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், மருதானை, குருணாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதற்கமைய இன்று (01) பிற்பகல் 5.00 மணிக்கு தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 143 இலிருந்து 146 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் (01) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான03 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (31) மிகக் கூடுதலாக 21 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 146 பேரில் தற்போது 126 நோயாளிகள் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இருவர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 231 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 146
குணமடைவு - 18

சிகிச்சையில் - 126
மரணம் - 02

மரணமடைந்தவர்கள் (05)
இலங்கையில் - 02
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 03
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 18
ஏப்ரல் 01 - ஒருவர் (18)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 146
ஏப்ரல் 01 - 03 பேர் (146)
மார்ச் 31 - 21 பேர் (143)

மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்


Add new comment

Or log in with...