இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா மே 12 வரை நீடிப்பு

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா மே 12 வரை நீடிப்பு-All types of VISA for foreigners Currently in SL Extended Till May 12

வீசா நீடிப்பது தொடர்பில் வீசா பிரிவிற்கு வர வேண்டாம்

கொரோனா வைரஸ் பரவல் கருதி, இலங்கையில் தற்போது வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் மே 12 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வீசாக்களைப் பெற ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும். இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள்திற்கு வர வேண்டாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில்‌ தங்கியிருக்கும்‌ வெளிநாட்டினர்களுக்கான வீசாக்களை நீடிப்பது தொடர்பாக குடிவரவு மற்றும்‌ குடியகல்வு இணைக்களத்தினால்‌ கடந்த மார்ச் 17 ஆம்‌ திகதி அறிவித்தலொன்றை விடுத்திருந்தது.

அதன்படி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள அனைத்து வகையான வீசாக்களின்‌ செல்லுபடியாகும் காலம்‌ 2020 மார்ச்‌ 14 முதல்‌ 2020 ஏப்ரல்‌ 12 வரை 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் நாட்டில்‌ கோவிட்‌-19 வைரஸ்‌ பரவுவதை கருத்திற்‌ கொண்டு தற்போது இலங்கையில்‌ தரித்திருக்கும்‌ வெளிநாட்டினர்கள்‌ பெற்றுள்ள்‌ அனைத்து வகையான வீசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும்‌ 30 நாட்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

  1. தற்சமயம்‌ வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான வீசாக்களின்‌ செல்லுபடியாகும் காலம்‌ எதிர்வரும் மே 12ஆம் திகதி வரை நீடிக்கப்படுகின்றது.
  2. வீசா நீடிப்பு தொடர்பில் செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும்  கடவுச்‌சீட்டில்‌ அதனை புறக்‌ குறிப்பிடுதல் தொடர்பில் கடைப்‌ பிழுக்க வேண்டிய நடைமுறை தொடர்பாக காலக் கிரமத்தில்‌ அறிவிக்கப்படும்‌. எனவே, ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவிப்பில்‌ குறிப்பிடப்பட்டுள்ளதன் படி குடிவரவு மற்றும்‌ குடியகல்வுத்‌ திணைக்களத்தின்‌ வீசா பிரிவிற்கு வருவதை தவிர்க்குமாறு இத்தால்‌ உங்களுக்கு தொடர்ந்தும்‌ அறியத்தருகின்றோம்‌.
  3. இக்காலப்பகுஇயில்‌ நீங்கள்‌ நாட்டை விட்டு வெளியேற விரும்பினால்‌ எந்தவொரு அபராதமுமின்றி விமான நிலையத்தில்‌ வீசா கட்டணத்தை செலுத்துவதன்‌ மூலம்‌ உங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற முடியும்‌.
  4. நீங்கள்‌ வீசாக்களை பெறுவதற்க்காக உங்களது கடவுச்சீட்டுகளை குடிவரவு மற்றும்‌ குடியகல்வுத் திணைக்களத்தின்‌ வீசா பிரிவிடம்‌ ஏற்கனவே ஒப்படைத்திருப்பின்‌ அங்கு உங்களுக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின்‌ செல்லுபடி காலமும்‌ மேலும்‌ 3௦ நாட்களுக்கு அதாவது 2020 மே 12 வரை நீடிக்கப்பட்டுள்ளது இக்காலப்பகுஇயில்‌ நீங்கள்‌ நாட்டை விட்டு வெளியேற விரும்பினால்‌ மட்டும்‌ உங்களது கடவுச்சீட்டை இத்திணைக்களத்திடம்‌ இருந்து பெற்றுக் கொள்வதற்காக, குறித்த பற்றுச்சீட்டினதும்‌ விமான பயணச்சீட்டினதும்‌ நிழற்‌ பிரதிகளை கீழ்க்‌ காணும்‌ மின்னஞ்சல்‌ முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும்‌ என்பதுடன்‌ இது சம்பந்தமாக தேவையான அறிவுறுத்தல்களை திணைக்களம்‌ அவ்வப்போது உங்களுக்கு வழங்கும்‌

I. [email protected]
II. [email protected]
III. [email protected]
IV. [email protected]

மேலதிக விசாரணைகளுக்கு: 0771588724


Add new comment

Or log in with...