கொரோனாவினால் மியன்மாரில் முதல் மரணம் பதிவு!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மியன்மாரில் முதல் மரணம் பதிவாகியுள்ளது.

69 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர் மியன்மாரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (31) உயிரிழந்துள்ளார்.

இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

புற்றுநோயாளியான குறித்த நபர், அவுஸ்திரேலியாவில் சிகிச்சை செய்து கொண்டு, மியன்மாருக்கு சிங்கப்பூர் வழியாக திரும்பும்போது சிங்கப்பூரில்  தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மியன்மாரில் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக் காரணமாக சுமார் 37,600 பேர் உயிரிழந்துள்ளதோடு, இந்நோய்த் தொற்றுக்கு சுமார் 785,000 பேர் பதிவாகியுள்ளனர். அத்தோடு இந்நோயினால் பீடிக்கப்பட்டிருந்த சுமார்165,000 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...