சிறைச்சாலை பஸ் விபத்து; 3 பெண்கள் உள்ளிட்ட 6 கான்ஸ்டபிள்கள் காயம் | தினகரன்


சிறைச்சாலை பஸ் விபத்து; 3 பெண்கள் உள்ளிட்ட 6 கான்ஸ்டபிள்கள் காயம்

சிறைச்சாலை பஸ் விபத்து; 3 பெண்கள் உள்ளிட்ட 6 கான்ஸ்டபிள்கள் காயம்-Prison-Bus Accident-6 Injured-Nuwara Eliya-Badulla

சிறைச்சாலை திணைக்களத்துக்குரிய பஸ் விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அறுவர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி சென்ற சிறைச்சாலை பஸ்ஸே இன்று (31) மாலை 05.30 மணியளவில் நுவரெலியா ஹக்கல பூங்கா பகுதியில் வைத்து, பாரிய வளைவொன்றில் தம்புரண்டு குடியிருப்யொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சிறைச்சாலை பஸ் விபத்து; கான்ஸ்டபிள் அறுவர் காயம்-Prison-Bus Accident-6 Injured-Nuwara Eliya-Badulla

விபத்தின்போது கைதிகள் எவரும் பஸ்ஸில் இருக்கவில்லை எனவும், சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே பயணித்துள்ளனர் எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் அறுவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பெண் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறைச்சாலை பஸ் விபத்து; கான்ஸ்டபிள் அறுவர் காயம்-Prison-Bus Accident-6 Injured-Nuwara Eliya-Badulla

(ஹற்றன் சுழற்சி நிருபர் - ஜி. கிரிஷாந்தன்)


Add new comment

Or log in with...