பரவை முனியம்மா காலமானார் | தினகரன்

பரவை முனியம்மா காலமானார்

சிங்கம் போல.... காதுக்குள் இன்றும் ஒலிக்கும் பாடல்

தென்னிந்தியாவின் பிரபல நாட்டுப்புறப் பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா (வயது 76) நேற்று அதிகாலை மதுரையில் காலமானார். நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார் பரவை முனியம்மா.

இவருடைய மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை, பரவையைச் சேர்ந்த இவர் தன்னுடைய சிறு வயதிலேயே கலைத் துறைக்குள் நுழைந்தவர். நாட்டுப்புறப் பாடல்களை பாடி வந்த இவர், 2003ஆம் ஆண்டில் வெளியான 'தூள்' படத்தில் நடிகர் விக்ரமிற்கு பாட்டியாக நடித்து, பலரது மனங்களிலும் இடம்பிடித்தார்.

அப்படத்தில் இவர் பாடிய 'மதுர வீரன் தானே' பாடல் மிகப் பெரிய புகழை இவருக்கு தேடித் தந்தது. அவர்  தூள், காதல் சடுகுடு, சவாலே சமாளி, தமிழ்ப் பாடம், மான்கராத்தே, சண்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுப்புற பாடல்களை பாடி வரும் அவர் கிராமத்து வாசனை, குறவன் குறத்தி ஆட்டம், அழிந்த நகரான தனுஷ்கோடியின் கதை, மணிக்குறவன் கதை, கரிமேடு கருவாயன் கதை போன்ற மியூசிக்  அல்பங்களை வெளியிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் மூலம்  திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வந்தவர்இ சிங்கம் போல... பாடல் மூலம் பிரபலமானவர். பின்னர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தவர்இ கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்து வந்த பரவை முனியம்மாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.10 மணியளவில் காலமானார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சி ஒன்றையும் பரவை முனியம்மா நடத்தி வந்தார். கிராமத்து சமையலை அதன் மூலம் பலருக்கு அறிமுகப்படுத்தினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர்  மூளை வளர்ச்சி குறைவான தன்னுடைய கடைசி மகனுக்கு  தனக்குப் பின்னரும் தன்னுடைய உதவித் தொகையைக் கொடுக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை விடுத்தார். இவருடைய நிலையை தெரிந்து கொண்ட 2015இல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஆறு இலட்ச ஷரூபா  நிதி உதவியும்இ குடும்ப செலவுகளுக்கு மாதந்தோறும் ஆறாயிரம் ஷரூபாயும் வழங்குவதாக அறிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் இவர் இறந்து விட்டதாக வதந்திகள் வெளியாகின. இவர் வறுமை காரணமாக மருத்துவச் செலவுக்குக் கூட பணமில்லாமல் கஷ்டப்படுகிறார் என செய்திகள் வந்ததும் நடிகர்கள் விஷால், தனுஷ் போன்ற பலரும் இவருக்கு பண உதவி செய்தனர். மேலும்  நடிகர் சங்கம் சார்பாகவும் உதவித் தொகை வழங்கப்பட்டது.

'கலைமாமணி' பட்டம் வழங்கி தமிழக அரசு இவரை அங்கீகரித்தது. இவர் இறுதியாக நடித்த படம்  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மான்கராத்தே'.

மேலும்  சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல நாட்களாக முடங்கிக் கிடந்த அவர்

நேற்று அதிகாலை 3 மணியளவில் காலமானார். நேற்று மாலையில் அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற்றது.


Add new comment

Or log in with...