இலங்கையில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு!

இலங்கையில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு!-2nd COVID19 Patient Dead

- கொச்சிக்கடை, போருத்தோட்டை சேர்ந்த 64 வயது நபர்
- இருதய நோயாளி; நீண்ட நாள் சுவாச பிரச்சினை கொண்டவர்

இலங்கையில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள போருத்தோட்டையைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

64 வயதான குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இன்றையதினமே (30) உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவர் இன்றையதினம் (30) தனியார் வைத்தியசாலையிலிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும், நீண்ட நாள் சுவாச பிரச்சினை கொண்டவர் எனவும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகவீனமுற்ற இவர், நீரகொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இவர் இன்று (30) நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையின் 20 ஆம் இலக்க வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கிடைத்த மருத்துவ பரிசோதனை அறிக்கையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்றையதினம் உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து போருதொட்ட, ஆப்தீன் மாவத்தையிலுள்ள அவரது வீட்டிலுள்ளவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுதப்பட்டுள்ளதுடன் குறித்த வீதியும் மூடப்பட்டுள்ளது.

அத்துடன் இவர் ஆரம்பத்தில் சிகிச்சைப் பெற்று வந்த தனியார் வைத்தியசாலை பணிக்குழாமினரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், இம்மாதம் 08 ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நீர்கொழும்பிலுள்ள இரு தனியார் வைத்தியர்களிடமும், விசேட வைத்திய நிபுணர் ஒருவரிடமும் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், விசேட வைத்திய நிபுணரே அந்த நபரை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 122 பேரில் தற்போது 106 நோயாளிகள் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இலங்கையில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவக் கண்காணிப்பில் தற்போது 104 பேர் வைக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் நேற்றுமுன்தினம் (28) பதிவானது.

60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்திருந்தார்.

இதேவேளை, 55 மற்றும் 70 வயதுடைய இரு இலங்கையர் லண்டனில் மரணமடைந்திருந்தனர்.

இதேவேளை கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருந்தார்.

அதற்கமைய உலகளாவிய ரீதியில் 3 பேரும், இலங்கையில் இருவரும் என இலங்கையர் 5 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அடையாளம் - 122
கண்காணிப்பில் - 104
சிகிச்சையில் - 106
குணமடைவு - 14

மரணம் - 02

மரணமடைந்தவர்கள் (05)
இலங்கையில் - 02
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 03
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 14
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 122
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்

 


Add new comment

Or log in with...