கொரோனாவினால் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை | தினகரன்


கொரோனாவினால் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று (29) இடம்பெற்றது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி,  பொதுச் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் கொட்டிகாவத்தை பொது மயானத்தில் குறித்த இறுதிக்கிரியை இடம்பெற்றது.

சீல் வைக்கப்பட்ட சடலத்தின் முகத்தை சிறிது நேரத்திற்கு பார்வையிட குடும்ப உறவினர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த  நோயாளி அங்கொடை  ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்றிரவு (28)  உயிரிழந்துள்ளார்.

குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்ட இவர் நான்காவது நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த இவர் 60 வயதுடைய ஆண் நபர் ஆவர்.

 

 


Add new comment

Or log in with...