மேலும் ஒருவர் குணமடைவு; 115 பேரில் 104 பேர் சிகிச்சையில் | தினகரன்


மேலும் ஒருவர் குணமடைவு; 115 பேரில் 104 பேர் சிகிச்சையில்

மேலும் ஒருவர் குணமடைவு; 115 பேரில் 104 பேர் சிகிச்சையில்-One More COVID19 Patient Recovered and Discharged

117 பேர் கண்காணிப்பில்; 10 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று (29) குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி, COVID-19 நோயினால் பாதிக்கப்பட்ட 10 பேர் இது வரை குணமடைந்துள்ளதாக, இலங்கை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு மற்றும் இலங்கை சுகாதார மேம்பாட்டு திணைக்களம் ஆகியன அறிவித்துள்ளன.

நேற்றையதினம் (28) இருவர் வீடு திரும்பியிருந்தனர்.

அதற்கமைய சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 115 பேரில் தற்போது 104 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றையதினம் (28) இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நோயாளி உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நேற்று (28) இரவு வரை மருத்துவக் கண்காணிப்பில் 199 பேர் இருந்த நிலையில், தற்போது 117 பேரே இவ்வாறு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அடையாளம் - 115
குணமடைவு - 10

கண்காணிப்பில் - 117
சிகிச்சையில் - 104

மரணம் - 01

மரணமடைந்தவர்கள் (04)
இலங்கையில்
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில்
இலண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள்
மார்ச் 29 - 01 பேர் (10)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)


Add new comment

Or log in with...