சமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது | தினகரன்


சமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது

சமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது-38 Yr Old Arrested for Sharing Fake News in Social Media

சமூக வலைத்தளம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (28) இரவு 8.45 மணியளவில் குருணாகல், உஹுமிய பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் தெஹிவளை, களுபோவில, ஶ்ரீ மஹாவிகாரை வீதியில் வசிக்கும் 38 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நாளையதினம் (29) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


Add new comment

Or log in with...