கல்முனையில் தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு | தினகரன்


கல்முனையில் தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு

ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய கொவிட் 19 எனும் கொரோணா வைரஸ் தொற்று நோயை தடுக்கும் நோக்கில் கல்முனை பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் கல்முனை மாநகர சபை என்பன ஒன்றிணைந்து நகரை தொற்று நீக்கும் வேலைத்திட்டம் இன்று (28) கல்முனை மாநகரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கல்முனை பிரதான பஸ் நிலையம்,பொதுச் சந்தைகள், தனியார் பஸ் தரிப்பிடங்கள், அரச-தனியார் அலுவலகங்கள், சத்தோச விற்பனை நிலையங்கள், கடைத் தெருக்கள் என பொதுமக்கள் வந்துசெல்லும் பல இடங்கள் தொற்றுநீக்கி விசிறப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

இதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தர, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த, சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எம்.எச்.ஏ.மதுரங்க, கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சி.அன்சார், பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட மாநகர சபை அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(ஏ.எல்.எம். ஸினாஸ் - பெரியநீலாவணை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...