பெப்ரவரி - மார்ச் VAT வரியை செலுத்த ஏப்ரல் 30 வரை அவகாசம்

பெப்ரவரி - மார்ச் VAT வரியை செலுத்த ஏப்ரல் 30 வரை அவகாசம்-VAT Payment Notice-Inland Revenue Department

செலுத்துவோருக்கு தாமத கட்டணம், அபராதம் அறவிடப்படமாட்டாது!

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (Value Added Tax-VAT) செலுத்துவதற்கான கால எல்லை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம், இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தற்போது வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் நிதிச் சேவைகள் தொடர்புடைய குறித்த வரியை செலுத்துமிடத்து, இக்காலத்திற்கு அறவிடப்பட வேண்டிய தாமதக் கொடுப்பனவு மற்றும் அபராதங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, VAT தொடர்பில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தரப்பினருக்கும், ஏப்ரல் 30 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, VAT வரி தொடர்பில் வழங்கப்படும் தற்காலிக பதிவுச் சான்றிதழ் மற்றும் வவுச்சர்கள் தொடர்பிலான செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VAT வரி சட்டத்தின் கீழ், பெப்ரவரி மாதத்திற்கான VAT வரி அறிக்கைகளை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அக்காலப் பகுதிக்கான அறிக்கைகளை உள்நாட்டு இறைவரி திணைக்கத்தின் இணைய சேவை (e-Service) மூலம் மார்ச் 31 வரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆயினும், இணைய சேவை சேவை மூலம் அல்லது நேரடியாக கொண்டு வந்து வழங்க முடியாதவர்களுக்கு, குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க, ஏப்ரல் 30 வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...