கடனை திருப்பிச் செலுத்த நிவாரணக் காலத்தை தருமாறு உலக நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை

கொவிட் - 19 கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய அதிக இடர்நிலைமை உள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்டுள்ள கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நிவாரணக் காலத்தை அல்லது கடனை பிற்போடும் வசதியை அளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்தரப்பு, இருதரப்பு உதவி முகவர் நிறுவனங்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு ஜனாதிபதி உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கொவிட் -19 சமூக இடைவெளி, பொதுமக்கள் சுகாதார, சமூக பாதுகாப்பு முறைமையை முகாமைத்துவம் செய்வதற்கு இந்த நிவாரணம் உதவும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...