ஊரடங்கை மீறி செயற்பட்ட 2,405 பேர் பொலிஸாரால் கைது

ஊரடங்கை மீறி செயற்பட்ட 2,405 பேர் பொலிஸாரால் கைது-2405 Arrested Breaching Curfew Law
(படம்: பாறுக் ஷிஹான்)

646 வாகனங்கள் கைப்பற்றல்

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அதனை மீறி செயற்பட்ட 2,405 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் நடந்துகொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களால் இன்று (24) நண்பகல் 12.00 மணி வரை, 2,405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதில் வீதிகளில் தேவையற்ற வகையில் நடமாடியவர்களே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒன்றுகூடி மதுபானம் அருந்தியவர்கள், வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களும் இதில் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்களில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் 646 வாகனங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


Add new comment

Or log in with...