- இந்தியாவில் 500 பேருக்கு கொரோனா தொற்று; 10 பேர் பலி
- 21 நாட்களை சமாளிக்க முடியாவிட்டால் 21 வருடங்கள் பின்நோக்கி செல்ல வேண்டும்
- நரேந்திர மோடி அறிவிப்பு
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு அடுத்த 21 நாள்களுக்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த 21 நாள்களை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்றால் நாம் 21 வருடங்கள் பின் நோக்கிச் சென்று விடுவோம் என்று கூறிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூகத்திலிருந்து ஒதுங்கி இருப்பது ஒன்றுதான் வழி என்றும் கூறியுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி மக்கள் ஊரடங்கு (Janata Curfew) நாட்டுக்கும் மனிதகுலத்துக்கும் எதிராக எந்தவொரு பிரச்சினை வந்தாலும் இந்தியர்கள் எப்படி கைகோத்து ஒன்றாகப் போராடுவார்கள் என்பதைக் காட்டியது என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
Add new comment