ஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய சுமார் 800 பேர் கைது (UPDATE)

ஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 338 பேர் கைது-338 Arrested for Breaching Police Curfew Law

- வீதிகளில் பயணித்த 154 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன
- மைதானங்களிலும், வீதிகளிலும் மதுபானம் அருந்திய பலர் கைது

ஊரடங்கு அமுலில் இருக்கின்ற வேளையில் அதனை மீறும் வகையில் நடந்து கொண்ட 790 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தியது முதல், ஞாயிறு (22) பிற்பகல் 5.00 மணி வரை, குறித்த 790 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அந்தந்த பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட 154 வாகனங்களை பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

இதில், மைதானத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தோர், ஊரடங்கின்போது உணவகம் திறந்திருந்தவர், வீதிகளில் வாகனங்களில் பயணித்தோர், மது அருந்தி முறையற்ற வகையில் வீதியில் நடமாடியோர், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் அந்தந்த பொலிஸ் நிலையத்தின் மூலம், ஒலி பெருக்கிகள் மூலம் பொதுமக்களை வெளியில் வர வேண்டாம் என பொலிஸார் அறிவித்து வருவதோடு, ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


ஊரடங்கு அமுல்படுத்தியதிலிருந்து அதனை மீறிய 338 பேர் கைது 3.05pm

- மைதானத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தோர்
- ஊரடங்கின்போது உணவகம் திறந்திருந்தவர்
- வீதிகளில் வாகனங்களில் பயணித்தோர்
- மது அருந்தி முறையற்ற வகையில் வீதியில் சென்றவர்கள்
- வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள்

ஊரடங்கு அமுலில் இருக்கின்ற வேளையில் அதனை மீறும் வகையில் நடந்து கொண்ட 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது முதல், இன்று (22) காலை 9.00 மணி வரை 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், மைதானத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தோர், ஊரடங்கின்போது உணவகம் திறந்திருந்தவர், வீதிகளில் வாகனங்களில் பயணித்தோர், மது அருந்தி முறையற்ற வகையில் வீதியில் சென்றவர்கள், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் அந்தந்த பொலிஸ் நிலையத்தின் மூலம், ஒலி பெருக்கிகள் மூலம் பொதுமக்களை வெளியில் வர வேண்டாம் என பொலிஸார் அறிவித்து வருவதோடு, ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...