அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டு விழா: மினா இல்லம் வெற்றி

அக்கரைப்பற்று, அஸ்-−ஸிராஜ் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு விழா-−2020 போட்டிகளில் மினா (நீலம்) இல்லம் முதலாமிடத்தைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

இரண்டாமிடத்தை அறபா (பச்சை) இல்லமும், மூன்றாமிடத்தை ஸம்ஸம் (மஞ்சள்) இல்லமும் பெற்றுக் கொண்டன.

அக்கரைப்பற்று, அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு விழா-2020 இறுதிநாள் நிகழ்வுகள் அதிபர் ஏ.எல்.இக்பால் தலைமையில் கல்லூரி மைதானத்தில் விமர்சையாக நடந்தேறின.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபில் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும், அம்பாறை மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா கௌரவ அதிதியாகவும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.கே.பண்டார சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் அதிதிகளினால் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வருடாந்த இல்ல விளையாட்டு விழாவையொட்டி நடாத்தப்பட்ட பெரு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

போட்டி நிகழ்வுகள் கல்வி அமைச்சின் நியமங்களுக்கமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் அணிநடை, உடற்பயிற்சி, இல்ல அலங்காரம் என்பன பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததாக விளையாட்டுக் குழுச் செயலாளர் ஆசிரியர் எம்.எம்.எம்.ஹாறுன் தெரிவித்தார்.விளையாட்டுக் விழாவுக்கு வருகைதந்த அதிதிகள் அதிபர் ஏ.எல்.இக்பால் தலைமையிலான ஆசிரியர்கள் குழுவினரால் வரவேற்கப்பட்டு, பிரதான மேடைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச முக்கியஸ்த்தர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றார்கள் மாணவர்கள் என அதிகமானோர் இறுதிநாள் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்


Add new comment

Or log in with...