கடல் வழியாக புத்தளத்திலிருந்து மன்னார் செல்ல முயன்ற 20 பேர் கைது

கடல் வழியாக புத்தளத்திலிருந்து மன்னார் செல்ல முயன்ற 20 பேர் கைது-Navy apprehends 20 persons for not adhering to Curfew

- 3 பெண்கள்; 6 மாத குழந்தை உள்ளிட்ட 3 சிறுமிகள்
- சிலாபம், கற்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்க முயற்சிகளை பின்பற்றாத 20 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முன்னேற்பாடுளுக்கு இணங்க, சிலாபம், புத்தளம், கொச்சிக்கடை, வத்தளை, ஜா-எல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றையதினம் (19) முற்பகல் தளர்த்தப்பட்ட ஊரடங்கு பிற்பகல் 2.00 மணி முதல் அமுலில் இருந்த வேளையில் அதனை மீறி செயற்பட்ட 20 பேர் இவ்வாறு கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துளளது.

பொலிஸ் ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல், புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கி சென்ற குழுவொன்று தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய கடற்படையினர் குறித்த நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கடல் வழியாக புத்தளத்திலிருந்து மன்னார் செல்ல முயன்ற 20 பேர் கைது-Navy apprehends 20 persons for not adhering to Curfew

கைது செய்யப்பட்டவர்களில் 03 பெண்கள் உள்ளடங்குவதாகும், 6 மாத பெண் குழந்தை மற்றும் 02 சிறுமிகளும் அடங்குவதாக கடற்படை அறிவித்துள்ளது.

சிலாபம், கற்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள், படகுகள் மூலம் மன்னாருக்கு புறப்படத் தயாரான நிலையில் பத்தலகுண்டு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக புத்தளத்திலிருந்து மன்னார் செல்ல முயன்ற 20 பேர் கைது-Navy apprehends 20 persons for not adhering to Curfew

கைது செய்யப்பட்ட நபர்கள் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலையில், ஒரு குடிமகனாக தங்கள் பொறுப்புகளை புறக்கணித்து, நாட்டில் உள்ள ஏனைய மக்களின் உயிரைப் பணயம் வைத்துள்ள நபர்கள் தொடர்பில் அரசாங்கம் கண்டிப்பாக சட்டத்தை அமுல்படுத்தும் என கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையால் வெளியிடப்பட்ட கைதான நபர்களின் பெயர்கள்
1. WS Fernando - Chilaw (34 years)
2. WMSN Fernando - Chilaw (32 years)
3. WN Fernando - Chilaw (25 years)
4. IP Nawas - Chilaw (24 years)
5. SS Jayawardhana - Chilaw (63 years)
6. SS Fernando - Kalpitiya (28 years)
7. WCB Fernando - Kalpitiya (22 years)
8. MBM Rukshana - Kalpitiya (18 years)
9. MBMV Almeda - Kalpitiya (16 years)
10. MBMM Lesintha - Kalpitiya (20 years)
11. AK Fernando - Kalpitiya (21 years)
12. N Fernando - Kalpitiya (43 years)
13. MB Almeda - Kalpitiya (42 years)
14. Nimlet Sharmali Cruise  - Chilaw (46 years)
15. Sudari Wshnika Dabarera - Chilaw (22 years)
16. S Mariya Prasanthi Cruise - Chilaw (26 years)
17. Kristin Jude Selwaraj Cruise - Chilaw (52 years)
18. Amisha Harshani - Chilaw (09 years)
19. Regiya Shewani - Chilaw (04 years)
20 Shanudi Shehara - Chilaw (06 month)


Add new comment

Or log in with...