இன்று மாலை 6 மணி முதல் நாடு பூராகவும் ஊரடங்கு

இன்று (20) மாலை 6.00 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை (23) வரை காலை 6.00 மணி வரை நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

இதேவேளை ஏற்கனவே புத்தளம், சிலாபம், வத்தளை, ஜா-எல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மு.ப. 9.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு 10 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அத்துடன், புத்தளம் மாவட்டம், சிலாபம், கொச்சிக்கடை பகுதிகளில் நேற்றுமுன்தினம் முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...