ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெறாது; அதி விசேட வர்த்தமானி(UPDATE)

ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெறாது; தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி!-Election Will Not be Held on Apr 25-Mahinda Deshapriya

பொதுத் தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட திகதியான எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி குறிப்பிட்ட திகதியில் இடம்பெறாது என்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெறாது; தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி!

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்தப்படமாட்டாது என அறவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தலை எந்த காரணத்திற்காகவும் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு இன்று நண்பகலுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் கருதி தேர்தல்கள் ஆணைக்குழு இம்முடிவை எடுத்தள்ளதாக, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய, சட்ட திட்டங்களுக்கு அமைய குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

ஆயினும் தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்து இரு வாரங்களின் பின்னர், மார்ச் 26 இற்குப் பின் தேர்தல் நடாத்தக்கூடிய சூழல் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான திகதி முடிவு செய்யப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு தேர்தலை நடாத்த முடியுமாயின், குறித்த திகதி, ஏப்ரல் 25 இற்குப் பின்னர், 14 வேலை நாட்களுக்குப் பிறகு வரும் ஒரு வேலை நாளாக அமையலாம் என அவர் இதன்போது தெரிவித்தார்.


Add new comment

Or log in with...