Thursday, March 19, 2020 - 1:01pm
பல்கலைக்கழகங்களில் இணைவதற்கான விண்ணப்பப்படிவங்களை அதிபர் ஊடாக உறுதிப்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மார்ச் 27ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் ஏப்ரல் 09ஆம் திகதி வரை இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியினுள் உரிய பாடசாலைகளுக்குச் சென்று பாடசாலை அதிபரினால் சான்றிதழ்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படிகுறிப்பிட்ட நாட்களில் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Add new comment