வெளிநாட்டு பயணிகளுக்கான வீசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வீசா செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான வீசாக்களின் செல்லுபடியாகும் காலம், மார்ச் 14ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 12ஆம் திகதி வரை 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் நேற்று (17) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பத்தரமுல்லை, சுஹருபாயவின் 4ஆம் மாடியிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வீசா பிரிவிற்கு ஏப்ரல் 08ஆம், 09ஆம் திகதிகளில் ஒரு நாளில் மாத்திரம் வருகை தந்து உரிய கட்டணத்தை செலுத்தி வீசா காலத்தை நீடித்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்கு முன்னர் எவராவது நாட்டை விட்டு வெளியேற விரும்பினால், அவர்கள் விமான நிலையத்தில் கட்டணத்தை செலுத்தி நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல முடியும் என்பதோடு, இதற்காக எந்தவித தண்டப்பணமும் அறவிடப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நாட்டை விட்டு வெளியேற விரும்புவோர், பின்வரும் மின்னஞ்சல்கள் ஊடாக தொடர்புகொண்டு அனுமதி கோருமாறு கேட்கப்பட்டுள்ளது.

[email protected]
[email protected]
[email protected]
[email protected]
[email protected]


Add new comment

Or log in with...