10 தனிமைப்படுத்தல் மையங்களில் 1,719 பேர்

10 தனிமைப்படுத்தல் மையங்களில் 1,719 பேர்-1,719 Admitted in 10 Quarantine Centers-Shavendra Silva

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைக்காக, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில், 1,719 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பதில் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அனைத்து இலத்திரனியல் ஊடகங்களும் இணைந்து இன்று (15) ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவர்களுள் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தல் நிலையங்கள் அனைத்திலும், இராணுவ வைத்தியசர்கள் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

இராணுவத்தினர் சிவில் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் தற்பொழுது செயற்பட்டு வருகின்றனர். இவர்களது தேசிய பாதுகாப்பு பணி என்பது இராணுவ காலத்தில் மாத்திரம் அல்ல, நாடு அனர்த்தத்தை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களின்போதும் கடமைகளை நிறைவேற்றுவதாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.


Add new comment

Or log in with...