அனைத்து பூங்காக்களும் இரு வாரங்களுக்கு பூட்டு | தினகரன்

அனைத்து பூங்காக்களும் இரு வாரங்களுக்கு பூட்டு

அனைத்து பூங்காக்களும் இரு வாரங்களுக்கு பூட்டு-Coronavirus-National Parks and Zoo Closed for 2 Weeks

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டிலுள்ள அனைத்து தேசிய பூங்காக்களும் இரு வார காலத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய  மிருகக் காட்சிசாலை திணைக்களம், சரணாலயங்கள் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் ஆகிய திணைக்களங்களின் கீழுள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும், இரு வாரங்களுக்கு மூடப்படுவதாக, சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வள அமைச்சின் செயலாளர் சரத் விஜேசிங்க அறிவித்துள்ளார்.

அந்த வகையில் நாளை (15) முதல் தெஹிவளை மிருகக் காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் பின்னவல மிருகக் காட்சிசாலை, ரிதியகம சபாரி பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...