வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சிகள் இடைநிறுத்தம்! | தினகரன்


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சிகள் இடைநிறுத்தம்!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் நிலைமையை கவனத்திற்கொண்டு சகல பயிற்சிகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானம் எடுத்துள்ளது.

பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையிலும் சுற்றுலாக்களை கட்டுப்படுத்தும் வகையிலும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய விடுதிகளில் தங்கியிருக்கும் சகல பயிற்சியாளர்களும் தமது வீடுகளுக்குச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த பணியகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ்  கட்டுப்படுத்தப்படும் வரை இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானம் எடுத்துள்ளது.


Add new comment

Or log in with...