நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய கட்டுமான வீடமைப்பு துறைகளின் பங்களிப்பு அவசியம்

Prime Group இன் தலைவர் பிராமனகே பிரேமலால்

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு ரியல் எஸ்டேட் துறை பெரும் பங்களிப்பு செய்கின்றது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய கட்டுமான மற்றும் வீடமைப்பு துறைகள் வளர்ச்சியடைய வேண்டுமென Prime Group இன் தலைவர் பிராமனகே பிரேமலால் தெரிவித்தார். 

கொழும்பு, வோர்ட் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் Prime Group இன், ஆடம்பர தொடர்மாடித் திட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 37மாடி, 160மீற்றர் உயரத்துடன், 162பேர்ச்சஸ் நிலப்பரப்பில் நிர்மானிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கும் அதிக நிலப்பரப்பில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் வீட்டு வளாகத்தில் அமைந்துள்ளது. வோட் பிளேஸில் அமைக்கப்பட்டு வரும் உயரமான கட்டிடம் பிரைம் கிராண்ட் ஆகும். 

பிரைம் கிராண்ட் திட்டத்துக்கு வோட் பிளேஸை ஏன் தெரிவு செய்ய காரணமென்ன? 

கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களின் கீழ் மற்றும் மத்தியதர சந்தைகளுக்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். உயர்தர சந்தையையும் கைப்பற்ற வேண்டிய தேவை எமக்கிருந்தது. கொழும்பு 07இல் மனையொன்றை சொந்தமாக வைத்திருப்பது பெருமைக்குரியதாகும், எமக்கு அதனை கொழும்பு 07இன் இதயமான வோட் பிளேஸிலேயே அமைக்க வேண்டியிருந்தது. 

எனவே, உயர்மட்ட வாடிக்கையாளர்களுக்கென இதனை பிரத்தியேகமாக நிர்மாணித்து வருகின்றோம். 

இந்த முயற்சிக்கு பின்னால் உள்ள பங்காளர்கள் யார் என குறிப்பிட முடியுமா? 

இதன் கட்டுமானப் பணிகள் MAGA Engineering , வடிவமைப்பின் அடிப்படையில் இலங்கையின் ரியல் எஸ்டேட் வெளியில் பிரைம் கிராண்ட் என்ன புத்தாக்கங்களை கொண்டு வந்துள்ளது? 

குடியிருப்புக்கான தகுதி தொடர்பில் நாம் பிரத்தியேகமாக கவனம் செலுத்தியுள்ளோம். இங்கு இரண்டு வாகன தரிப்பிடங்கள், இலத்திரனியல் வாகனங்களுக்கான மின்னேற்றல் வசதியும் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு அம்சத்திலும் அதன் பிரத்தியேக வாடிக்கையாளர்களின் தனியுரிமையை நிலைநிறுத்தும் வகையில் Prime Grand வடிவமைக்கப்பட்டுள்ளது. ,ன்று சொகுசு மாடிமனைகளில் குடியிருப்பவர்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை தனியுரிமை, அங்கு ஒவ்வொரு மனையும் ஒன்றையொன்று பார்க்க முடியாதவகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மனையின் வாசல் இன்னொரு மனையின் வாசலை நோக்காமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Prime Grand இல் எந்தவொரு மனை மற்றும் டீயடஉழலெ இன்னொன்றை நோக்கியவாறு அமைக்கப்படவில்லை. இதற்கு ஏற்றால் போல் ஒரு கோபுரம், இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்பானது மனைகள் ஒன்று நோக்கியவாறு, புலப்படும் வகையில் இருக்கின்றமையை தவிர்க்கின்றது. இரண்டு, மூன்று மற்றும் நான்கு படுக்கையறைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 

32ஆவது மற்றும் 5ஆம் மாடிகள் பொது வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 71மீற்றர் நீளமான நீச்சல் தடாகமொன்று 32ஆவது மாடியில் அமையவுள்ளதுடன், இது இலங்கையின் மிக உயரத்தில் அமையப்பெறும் நீச்சல் தடாகமாகும், இது பார் மற்றும் உணவகத்தையும் உள்ளடக்கவுள்ளது. ஐந்தாவது மாடியிலும் பொழுது போக்கு அம்சங்களுக்கென இடவசதி வழங்கப்பட்டுள்ளது. முழுமையான உடற்பயிற்சிக் கூடம், 36மீற்றர் நீளமான நீச்சல் தடாகம், விளையாடுவதற்கான பகுதி, உலகத்தரம் மிக்க ஸ்பா, பட்மின்டன் மைதானம், பல்நோக்கு மண்டபம், மினி-மார்ட் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் போன்றன குடியிருப்பாளர்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.  மேலும் பிரைம் கிராண்ட் கலப்பு அபிவிருத்தித் திட்டம் அல்ல. இது 100வீத குடியிருப்புக்கான, வணிக நடவடிக்கைகளற்ற திட்டமாகும்.

எவ்வித தடையுமின்றி சுற்று வட்டாரத்தின் அழகை கண்டு ரசிக்க முடியுமென்பதுடன், கொழும்பு 7இல் இனிமேல் உயரமான கட்டிடங்களை அமைக்க முடியாது என்ற சட்டதிட்ட மாற்றத்தினால் எதிர்காலத்திலும் உங்களுக்கு எவ்வித தடையுமின்றி இது தொடரும். 

இந்தத் திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது? 

தற்போது நாம் 35ஆவது மாடியில் உள்ளோம். மார்ச் 15அல்லது 20ஆம் திகதிகளில் எம்மால் கட்டமைப்பை பூர்த்தி செய்ய முடியுமாக இருக்குமென்பதுடன், 2021இறுதிக்கு முன்னதாக திட்டத்தை முழுமையாக நிறைவு செய்ய எதிர்ப்பார்க்கின்றோம்.

எவ்வாறாயினும் நாம் நிர்ணயித்தமையை விட முன்னதாகவே பூர்த்தி செய்து வருகின்றோம். 

இந்த திட்டத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது? 

175 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். சதுர அடிக்கு மிகவும் போட்டித்தன்மை மிக்க தொகையான 325- 350 அமெரிக்க டொலர்கள் என்ற விலைக்கு கிடைப்பதுடன், நாம் இதனை இலங்கை ரூபாவில் விலையிட்டுள்ளோம். எனவே நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியானது எவ்வகையிலும் வாடிக்கையாளரை பாதிக்காது.  


Add new comment

Or log in with...