கொரோனா தொற்றிய முதல் இலங்கை பெண் வீடு திரும்பினார்

கொரோனா தொற்றிய முதல் இலங்கை பெண் வீடு திரும்பினார்-Corona Infected Sri Lankan Women Admitted in Italy Recovered

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அந்நாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை பெண் குணமடைந்துள்ளார்.

இத்தாலியின் மிலானிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இத்தாலியின் ப்ரெசியாவில் (Brescia) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் பூரண சுகமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளதாக துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

46 வயதான ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இருந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், இப்பெண்ணுக்கும் இந்நோய் தொற்றியிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...