இரு வாரங்களுக்கு குவைத் முடக்கம்; விமானங்கள் தடை | தினகரன்


இரு வாரங்களுக்கு குவைத் முடக்கம்; விமானங்கள் தடை

இரு வாரங்களுக்கு குவைத் முடக்கம்; விமானங்கள் தடை-Kuwait to close international airport-suspend all commercial flights

நாளை (13) முதல் இரு வாரங்களுக்கு அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களுக்கும் தடை விதிப்பதாக குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து குவைத் அரசாங்கம் இவ்வதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆயினும் சரக்கு விமானங்கள் (Cargo) நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று (12) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரையான இரு வாரங்களுக்கு, அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதாகவும் அந்நாடு அறிவிப்பு விடுத்துள்ளது.

அத்துடன், சந்தைகள், உணவங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிப்பதாக குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்நாட்டில் தற்போது வரை 72 பேர் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டு அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...