மொரட்டுவ பல்கலை - Huawei புரிந்துணர்வு ஒப்பந்தம் | தினகரன்


மொரட்டுவ பல்கலை - Huawei புரிந்துணர்வு ஒப்பந்தம்

மொரட்டுவ பல்கலை - Huawei புரிந்துணர்வு ஒப்பந்தம்-Huawei signs MOU with Sri Lanka’s Moratuwa University to enhance ICT Knowledge Transformation

Huawei Sri Lanka மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் (UOM) ஆகியன இணைந்து இலங்கையில் உள்ள திறமையான இளைஞர்களை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) களத்தில் தங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், எப்போதும் வளர்ந்து வரும் ICT துறையில் போட்டித்தன்மையுடன் இருப்பதனை இன்னும் இயலுமைப்படுத்தும் பொருட்டும்,  புரிந்துணர்வு ஒப்பந்தந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இது இலங்கை தனது "ஸ்மார்ட் நேஷன்" தொலைநோக்கு பார்வையை அடையும் பொருட்டு, அதனை ஆதரிப்பதற்கான Huawei நிறுவனத்தின் நீண்டகால டிஜிட்டல் உள்வாங்கல் முயற்சியான TECH4ALLஇன் ஓர் அங்கமாகும்.

மொரட்டுவ பல்கலை - Huawei புரிந்துணர்வு ஒப்பந்தம்-Huawei signs MOU with Sri Lanka’s Moratuwa University to enhance ICT Knowledge Transformation

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் நிகழ்வில்,  தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, மொரட்டுவ பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கே.கே.சி.கே. பெரேரா, Huawei Technologies Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரியான லியாங் யி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன, “உலகளவில் அங்கீகாரம் பெற்ற மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச தொழில்வாய்ப்பு சந்தைகளுக்குத் தேவையான சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தகுதிகளைக் கொண்ட ‘சாமர்த்தியமான தொழில்நுட்ப  கோட்பாளர்களை ’ உருவாக்குவதே எங்கள் முக்கியமான நோக்காகும். எதிர்கால உலகின் தலைவர்களாக அவர்கள் இருப்பார்கள்,” என்றார்.

"தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இந்த இலக்கை அடைய, Huawei நிறுவனத்தின் இத்தகைய முயற்சி எங்களுக்கு துணைபுரியும் என்று நான் நம்புகிறேன்," என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

"21 ஆம் நூற்றாண்டு அறிவை மையமாகக் கொண்ட நூற்றாண்டு என்று அறியப்படுவதுடன், உலகளவில் போட்டித்தன்மையுடன் இருப்பது அவசியமாகும். Huawei மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் எடுத்த இந்த நடவடிக்கை ஒரு பாரிய சமூக மாற்றத்தை நோக்கியும், தொழில்நுட்ப புத்தாக்க கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு துணிச்சலான நடவடிக்கை என்று நான் நம்புகிறேன்,” என உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் ஸ்மார்ட் கற்றல் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுவதுடன்,  தேவையான தொழில்நுட்ப உதவிகள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும்,  21 ஆம் நூற்றாண்டின் கேள்விகளுக்கு ஈடுகொடுக்கும்  வகையில் மேலும் தொழில்நுட்ப கோட்பாளர்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்த தொழில்நுட்ப பீடங்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கே.கே.சி.கே. பெரேரா, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் முன்னணி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்ற வகையில், மேம்பட்ட அறிவானது புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.மேலும், இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையின் எதிர்கால கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருப்பதற்கும்,  எங்கள் மாணவர்களின் எதிர்கால அபிவிருத்திக்காகவும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்", என்றார்.

"விரைவான தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இசைவாக்கமடையாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. இதைக் கருத்தில் கொண்டுதான், எமது கொள்கைகள் உலகளாவிய சந்தைகளை வெற்றிகொள்ள எதிர்கால சந்ததியினரின் ICT திறன்களையும், டிஜிட்டல் திறன்களையும் வளர்ப்பதற்கு தேவையான சூழலை உருவாக்கும். இந்த ஒத்துழைப்பு, நிச்சயமாக வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறையின் புதிய முன்னேற்றங்களுடன், எங்கள் மாணவர் அதிக தொடர்புகொள்ள அதிக வாய்ப்புகளைத் திறக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“ICT மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், இணைய புராட்பேண்ட் அணுகலின் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கும், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், இந்த அழகான நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் ICT அறிவை மேம்படுத்துவதற்கும் நாங்கள் உறுதியாகவுள்ளோம். பல்கலைக்கழக பட்டதாரிகளின் நுட்பங்கள், திறன்கள் மற்றும் பட்டதாரிகளிடமிருந்தான நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க, இலங்கையில் உயர் மட்ட தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர் திறமைகளை நாங்கள் தொடர்ந்து அபிவிருத்தி செய்வோம்," என Huawei Technologies Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரியான லியாங் யி தெரிவித்தார்.

Tech4ALL , இணைப்பு, அப்ளிகேஷன்கள் மற்றும் திறன்கள் ஆகிய மூன்று முன்னுரிமைகள் மீது இது கவனம் செலுத்துகிறது" என்ற அவர், அவற்றை இணைப்பு அடிப்படையில் சேர்க்கும் போது, Huawei தொடர்ச்சியாக செலவீனம் மற்றும் தொடர்பாடல் எல்லை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் தடைகளை குறைக்கும், மற்றும் அப்ளிகேஷன்களின் அடிப்படையில் Huawei சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும். மேலும், பல்வேறு சமூகங்கள் மற்றும் தொழில்களுக்கு கூடுதல் அப்ளிகேஷன்களை உருவாக்க டெவலப்பர்களுக்கு உதவும். திறன்களைப் பொறுத்தவரை, டிஜிட்டல் திறன்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், தேவையான உதவிகளை வழங்குவதற்கும் அரசாங்கங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பிற தொழில்துறைகளுடன் Huawei செயல்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், Huawei விரைவில் மொரட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கூட்டு புதுமை ஆய்வகத்தைத் திறப்பதுடன், இது இளங்கலை மற்றும் முதுகலை ஆராய்ச்சி பணிகளை எளிதாக்குவதுடன், தொழில்துறை தேவைகளுக்கான தீர்வுகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்க ஒரு தளத்தை வழங்குவது மட்டுமன்றி அதிநவீன ICT தொழில்நுட்பங்கள் குறித்த சான்றிதழ் கற்கைநெறிகளை நடாத்தும். இதற்கு மேலதிகமாக, இது மாணவர்களுக்கு வழங்கப்படும் தொழில்துறை பயிற்சி மற்றும் 2016 ஆம் ஆண்டில் Huawei தொடங்கிய ‘எதிர்கால திட்டத்திற்கான விதைகள்’ போன்ற தொடர்ச்சியான ஈடுபாடுகளை மேலும் வலுப்படுத்தும்.

மேலும் Huaweiஇன் உலகளாவிய சிரேஷ்ட நிபுணர்கள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படுவதுடன், தொழில்முறை தொழில்நுட்ப சான்றிதழை செயல்படுத்த ஆதரவு வழங்கப்படும். ICT துறையின் மாறிவரும் சந்தை தேவைகள் மற்றும் சவால்களை பூர்த்தி செய்ய இலங்கை மற்றும் தெற்காசிய பிராந்தியங்களுக்கு உயர்தர ICT திறமைகளை வழங்குவதை இந்த பயிற்சி திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையில் Huawei 1998 முதல் செயல்பட்டு வருகிறது, மேலும், உள்நாட்டில் உள்ள பிரதான தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுடன் விரிவான மற்றும் ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது.

பல ஆண்டுகளாக, Huawei நிறுவனம் இலங்கையில் ICT திறன் சூழல்கட்டமைப்பின் வளர்ச்சியை 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Huawei விதைகளுக்கான எதிர்காலத் திட்டம், மற்றும் திறமையான இளைஞர்களுக்கு உள்ளகப்பயிற்சி வழங்குதல் மற்றும் ICT திறன் தொழில்துறை பயிற்சி போன்ற செயல்களின் மூலம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.


Add new comment

Or log in with...