‘மின்னல் வேகம், எல்லையற்ற வேடிக்கை’ OPPO F15 விரைவில்...

OPPO தனது புதிய முதன்மையான வடிவமைப்பான OPPO F15 கையடக்க தொலைபேசியை இம்மாதம் இலங்கை சந்தையில் வெளியிடவுள்ளது. மிக நேர்த்தியான வடிவமைப்பை விரும்புபவர்களுக்கான வடிவமைப்பபாக வெளி வரவுள்ளதோடு, தொழில்நுட்ப நவநாகரீகமான, 48MP அல்ட்ரா வைட் ஆங்கிள் மெக்ரோ குவாட் கெமராவையும் கொண்டுள்ளது.

F சீரிஸ் ஆனது சிறந்த காட்சி வெளிப்பாடு, நவீன போக்கு, தரம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றதாகும். மேலும் கடந்த காலங்களில் வாடிக்கையாளர்களின் மிகப்பெரும் வரவேற்பையும் அது வென்றுள்ளது. OPPO F15 இன் வெளியீடு, அதன் தொடரின் ஒரு புதிய சகாப்தத்தை வெளிப்படுத்துகிறது. இத்தொடரானது ‘கையடக்க தொலைபேசி சந்தையின் கேள்வியின் அடிப்படையில் தொடர்ச்சியான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நவநாகரீக வடிவமைப்புடன் அமைகின்றது.

தொழில்முறை புகைப்படம் எடுக்கும் செயல்திறன் உங்கள் கைகளில்
OPPO F15 உங்கள் உள்ளங்கையில் புத்துணர்ச்சியூட்டும் தொழில்முறை புகைப்பட அனுபவத்தை வழங்கவுள்ளது. நேர்த்தியான அம்சங்களைக் கொண்ட, OPPO F15 ஆனது 48MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் மெக்ரோ குவாட் கெமராவைக் கொண்டுள்ளது. இது அதி தொழில்முறை காட்சிகளை வழங்குகின்ற அதே போன்ற விலையைக் கொண்ட தயாரிப்புகளில் காணப்படும் அதிக திறன் கொண்ட கெமராவாகும்.

மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் செயல்திறன்
பணிச்சூழலியல் ரீதியாக ஒரு கையில் உள்ளடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட OPPO F15 ஆனது, மிக பாரம் குறைந்ததும் கைகளில் இலகுவாக தாங்கக்கூடியதுமாகும். இது இத்தொடரின் முந்தைய தலைமுறையான F11 இனை விட மின மெல்லியதாகவும் பாரம் குறைந்ததாகவும் இருக்கும். இதன் மெலிதான வடிவமைப்பைத் தவிர OPPO F15 ஆனது 4 கெமராக்களை சிறு பகுதியில் உள்ளடக்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டிருப்பதோடு, அதன் Flashlight ஆனது, வரிசையில் அமைந்த கெமரா ஒழுங்கமைப்புடன் பொருந்தும்படி தனித்துவமாக அதில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், திரையினுள் அமைக்கப்பட்ட கைரேகை உணரி (Fingerprint Unlock 3.0) ஆனது, கையடக்க தொலைபேசியை 0.32 செக்கன்களில் திறக்க உதவும். இத்திறனானது, முந்தைய தலைமுறையை விட 45% வேகமானது. இந்த புதிய தலைமுறை கைரேகை அன்லொக் முறைமையானது, வன்பொருள் மற்றும் மென்பொருள் மட்டத்தில் பல்வேறு மேம்பாடுகளை ஒருங்கிணைக்கிறது. இது மின்னல் வேகமாக அன்லொக் செய்யப்படுவது மாத்திரமல்லாமல், வன்பொருள் அடிப்படையிலான மோசடிகள் இடம்பெறாது தடுக்கும்  தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பையும் அதிகரிக்கும்.

OPPO F15 ஆனது மிகப் பாரிய 8GB RAM மற்றும் 128GB உள்ளக நினைவகத்தையும் (ROM) கொண்டிருப்பதன் மூலம் இது தடையற்ற அனுபவத்தையும் போதுமான சேமிப்பையும் வழங்கும். F15 ஆனது VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 இனையும் உள்ளடக்கியிருக்கும். இதன் காரணமாக 5 நிமிடங்களில் 10% சார்ஜிங், 30 நிமிடங்களில் 50% சார்ஜிங் செய்யக் கூடியதாக இருக்கும்.  VOOC 2.0 ஐ விட 26% வேக சார்ஜிங் வசதியையும் பெறலாம்.

சக்திவாய்ந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் கொண்ட அதிவேக பொழுதுபோக்கு மற்றும் கேமிங்
90.7% எனும் திரைக்கு - உடல் விகிதத்தை கொண்டுள்ள OPPO F15 ஆனது, FHD + AMOLED Screen இன் 2400 x 1080 தெளிவுத்திறனுடன் அதி மிருதுவான கேமிங் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தில் ஒருவர் முழுமையாக மூழ்க உதவும். AMOLED திரையை கொண்டுள்ள OPPO F15,  YouTube, Netflix or Amazon Prime வீடியோக்களை Full HDயில் பார்ப்பதற்கான ஒரு உயர் அனுபவத்தைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, வைட்வைன் எல் 1 (Widevine L1) சான்றிதழையும் அது கொண்டுள்ளது.

Frame Boost மற்றும் Touch Boost மூலம் OPPO F15 ஆனது மிருதுவான கேமிங் அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது. Frame Boost ஆனது தொலைபேசியின் செயல்பாடுகளை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதோடு,  விளையாட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றங்களில் ஒன்றாக காணப்படும், விளையாட்டின் போது ஏற்படும் தாமதத்தை ஈடுசெய்யும்.

OPPO பற்றி
வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை,  மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.

2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.
200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...