இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம் | தினகரன்

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம்

ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் செயற்படுவாரென எதிர்பார்ப்பதாக, இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பெரும்பான்மை மக்களின் பேராதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்-ஷவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் எனது மக்களினதும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரமேதாசவுக்கு ஆதரவளித்து, வாக்களித்த அனைவருக்கும் எனது விஷேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதிய ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம்,  நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் செயற்படுவாரென நம்புகின்றோம்.

நமது நாடென்ற வகையில் இன ஐக்கியத்துடனும் சகோதர மனப்பாங்குடனும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல புதிய ஜனாதிபதிக்கு வலிமையும் மனோ தைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக அமைச்சர் றிசாட் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...